சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கின்றது.
கங்குவா திரைப்படம்: நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கின்றார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: Kamal: குள்ளம்னு ஒதுக்கிய பாலிவுட்! தமிழுக்கு ராஜாவா இருக்கும் போது ஹிந்தில எலியா இருக்க விரும்பாத கமல்
30-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நாளை மறுநாள் வெளியாக இருக்கின்றது. நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கின்றார். மேலும் பாலிவுட் பிரபலங்களான திஷா பதாணி மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
சிறப்பு காட்சி: பொதுவாக பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே அதற்கு அதிகாலை காட்சி நிச்சயம் இருக்கும். இதனை ரசிகர்கள் ஷோ என்றே கூறலாம். தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அதன் ஸ்பெஷல் ஷோவை ரசிகர்கள் விசில் பறக்க பார்க்க விரும்புவார்கள்.
காட்சி ரத்து: ஆனால் சமீப காலமாக தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சி ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. அதற்கு காரணம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான விஜயின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் தான். இந்த திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்பட்டது. துணிவு திரைப்படம் அதிகாலை 1 மணிக்கு, வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.
உயிரிழப்பு: இதனால் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கம் முன்பு ரசிகர்கள் குவிந்த நிலையில் அந்த வழியாக சென்ற லாரி மீது ஏறி ஆட்டம் போட்ட ரசிகர் ஒருவர் லாரியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் அதிகாலை காட்சியை முழுவதுமாக ரத்து செய்து விட்டார்கள். தமிழகத்தை தவிர்த்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் அனுமதிக்கப்படுகின்றது.
இதையும் படிங்க: 3 நாள் கொல பட்டினி!.. என் பசியை போக்கியது அதுதான்!.. இளையராஜா உருக்கம்!…
கங்குவா சிறப்பு காட்சி: கங்குவா திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் வழங்க கோரி தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கை மனுவில் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் அதனை ஏற்க மறுத்த தமிழக அரசு தினசரி ஒரு காட்சி கூடுதலாக திரையிட அனுமதி வழங்குகிறோம் என்று கூறி அதிகாலை 9:00 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி சூர்யா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…