Connect with us
saravana store

ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு ஓவர் சீன் போடும் நடிகர்… இவர் அலப்பறை தாங்க முடியலடா சாமி…..

gossip

latest news

ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு ஓவர் சீன் போடும் நடிகர்… இவர் அலப்பறை தாங்க முடியலடா சாமி…..

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வரும் அனைவருக்கும் அந்த வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் எளிதில் அவர்களால் திரையுலகில் உச்சம் தொட முடியாது. பல தடைகளை தாண்டியே அவர்களால் சினிமாவில் சாதிக்க முடியும். அதுவும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே.

இவ்வாறு பல ஆண்டுகளாக திரையுலகில் வாய்ப்பு தேடி அலைந்து பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் கிடைத்த சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் அந்த இளம் நடிகர். இதுதவிர சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். பின்னர் பெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் களமிறங்கிய அந்த நடிகருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையும் படிங்க: அஜித் இவ்ளோவ் கெட்டவரா? அஜித் வீட்டின் முன் தீக்குளித்த இளம் பெண் – அதிர்ச்சி காரணம்!

அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான அந்த இளம் நடிகருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது. இதனையடுத்து பட வாய்ப்புகளும் வர தொடங்கியது. தனக்கு கிடைத்த வாய்ப்பை விடாமல் பிடித்து கொண்ட அந்த நடிகர் ஒரு படத்தில் முழுவதுமாக நடித்து முடித்து விட்டார். ஆனால் கொரோனா காரணமாக படம் வெளியாவது தள்ளி சென்றது.

இதற்கிடையில் அந்த நடிகரின் ஆல்பம் பாடல் ஒன்றும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தான் அந்த நடிகர் இரண்டாவது படத்தில் ஒப்பந்தமானார். அந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக நடிகருடன் வேலை செய்ய தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சிலர் இருந்தனர்.

இதையும் படிங்க: கொத்தா பிடித்து தூக்கலான போஸ் – பூராத்தையும் காட்டிய அனுபமா!

ஆனால் நடிகரோ, அவர்கள் யாரும் எனக்கு வேண்டாம் நானே தனியாக ஆட்களை வைத்துக் கொள்கிறேன் என பந்தா காட்டியுள்ளாராம். அதுமட்டுமின்றி பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு அலப்பறைகளையும் கொடுத்துள்ளார். இப்படி அந்த நடிகர் மீது பல புகார் எழ கடுப்பான தயாரிப்பு நிறுவனம் ஒரு படத்தில் நடித்துவிட்டு இவ்வளவு சீன் போடக்கூடாது என கடிந்து வருகிறார்களாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top