ஒதுக்கப்படும் தமிழ் தயாரிப்பாளர்கள்… முன்னணி தமிழ் நாயகர்களுக்கு வலை வீசும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்…

Telugu Producer: சமீபகாலமாக தமிழ் தயாரிப்பாளர்களை பின்னுக்கு தள்ளி கோலிவுட் நாயகர்களின் படங்களை அதிகமாக தெலுங்கு தயாரிப்பு நிர்வாகங்களே தயாரிப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் லிஸ்ட் தற்போது நீளும் போது அபாயத்தினையும் ஏற்படுத்தும் என்கின்றனர்.

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்களை பிரபல மற்றும் பிரம்மாண்ட நிறுவனங்கள் தயாரிப்பதே வழக்கம் ஆனது. ஆனால் சமீபகாலமாக தெலுங்கு நிறுவனங்கள் வரிசையாக உள்ளே வருகின்றனர். தெலுங்கு நடிகர்களின் படங்களை விட தமிழ் நடிகர்களின் படங்கள் அதிக வசூல் செய்யும்.

இதையும் படிங்க: என் கேரக்டர் தெரிஞ்சா பெண்கள் இனி அப்படி சொல்லவே மாட்டாங்க! அரவிந்த்சாமியின் இன்னொரு பக்கம்

அதனால் அவர்களை வைத்து படம் இயக்கும் போது பெரிய அளவில் வருமானம் பார்க்கலாம். மேலும், தமிழ் நடிகர்களும் 200 கோடியை சம்பளமாக கேட்கும் நிலைக்கு வந்துவிட்டனர். அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க தமிழ் நிறுவனங்களும் தயாராகவில்லை.

இதனால் தான் தெலுங்கு நிறுவனங்கள் கோலிவுட்டில் கால் பதிக்க தொடங்கிவிட்டது. அந்த வகையில் அஜித்தை தொடர்ந்து விஜயும் தற்போது தெலுங்கு தயாரிப்பு பக்கமே வந்து இருக்கிறார். இது தான் தற்போது கோலிவுட்டின் சர்ச்சை செய்தியாகி இருக்கிறது. இதுகுறித்து லிஸ்ட்டில் இருப்பது எல்லாருமே கோலிவுட் டாப் நாயர்கள் என்பது முக்கிய செய்தியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: என்ன தான் அம்மா பாசம் போக மாட்டிங்குதே முத்து!… விஜயா பாத்துக்கோங்க.. இல்ல கஷ்டம்

அஜித் மற்றும் ஆதிக் ரவிசந்திரன் இணையும் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ், சிவகார்த்திகேயனின் 23வது படத்தினை ஸ்ரீ லட்சுமி மூவிஸும், தனுஷின் அடுத்த இரண்டு படங்களையும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சினிமாஸ் தயாரிக்கின்றனர். இதில் தனுஷின் 51வது படத்தினை சேகர் கம்முலா இயக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story