More
Categories: Cinema News latest news

பிஞ்சிலேயே பழுத்து!.. ரசிகர்களிடம் ஏறி கட்டிக் கொண்ட குழந்தை நட்சத்திரங்களின் தற்போதைய நிலை!..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களின் தற்போதைய நிலைமை..!!

சினிமாவில் ஒரு சில காட்சிகளுக்காகவே நடிக்க வைக்கப்படும் சில குழந்தை நட்சத்திரங்கள் அதன் பிறகு சினிமாவை தன் வாழ்க்கையாக நினைத்து அதற்குள்ளேயே மூழ்கி விடுகிறார்கள். அவர்கள் வயதின் காரணமாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தங்களை வளர்ந்த நடிகையாக காட்டிக்கொண்டு இந்த குழந்தை நட்சத்திரங்கள் செய்யும் ஒரு சில வேலைகள் பார்ப்பதற்கே முகம் சுளிக்கு வகையில் வைத்து விடுகிறது.

Anikha Surendran

ஒரு சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்களின் லாபத்திற்காக இந்த குழந்தைகளை பிஞ்சிலேயே பழுக்க வைத்து விடுகிறார்கள்.இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது நடிகை அனிகா சுரேந்திரன் அஜித்துடன் என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தில் மகளாக ஒரு கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அனிகா சுரேந்திரன் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.

Advertising
Advertising

Raveena Daha

இந்த நிலையில் அனிகா சுரேந்திரன் சமூக வலைதளங்களில் நிறைய கிளாமரான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். காரணம் தான் ஒரு மிகப்பெரிய வளர்ந்து வரும் நடிகை என்பதால் தனக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு இளைஞர்களை கைக்குள் வைத்திருக்கிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இருந்தாலும் நிறைய பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க- நோ பார்ட்டி! நோ ப்யூட்டி – தனுஷின் திடீர் மாற்றத்திற்கு இதுதான் காரணமா?

Gabriella

அடுத்ததாக கேப்ரில்லா எனும் குழந்தை நட்சத்திரம் 3 எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் நடிகை சுருதிஹாசனுக்கு தங்கையாக ஒரு கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். முதல் படமே தனது சுட்டித்தனமான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இதனை அடுத்து விஜய் டிவியில் பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் இவருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதில் கலந்துகொண்டு மக்களிடையே மீண்டும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தார். இதனை அடுத்து ஈரமான ரோஜாவே எனும் சீரியலில் தற்சமயம் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கிளாமரான நிறைய காட்சிகளில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி வருகிறார். இது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

அடுத்ததாக சில்லுனு ஒரு காதல் எனும் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கும் ஜோதிகாவிற்கும் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் ஸ்ரேயா ஷர்மா. தனது முதல் படத்திலேயே செல்லமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் பேராதரவை பெற்றார். இதனை அடுத்து இவருக்கு அடுத்து எடுத்து பட வாய்ப்புகள் வராத காரணத்தினால் கிளாமரான உடை அணிந்து இன்ஸ்டாகிராமில் தற்சமயம் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு கீழே நிறைய இளைஞர்கள் கொச்சையாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.காரணம் இவர் அணியும் உடை மிகவும் மோசமாக இருப்பதன் மூலம் அனைவரும் திட்டி வருகிறார்கள்.

Shreya Sharma

அடுத்து உலக நாயகன் நடித்த பாபநாசம் திரைப்படத்தில் அவரது மகள் கதாபாத்திரத்தில் எஸ்தர் நடித்திருந்தார். இந்த படத்தில் மூத்த மகளாக மலையாளத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒரு நடிகையாக கருதப்படும் நிவேதா தாமஸ் நடித்திருந்தார். இதனை அடுத்து இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தற்சமயம் படு கிளாமராக தனது முன்னழகைக் காட்டி இளைஞர்களை கவர்ச்சி வலையில் மூழ்கடித்து வருகிறார்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் அதிகமாக பார்க்கப்பட்ட ஒரு புகைப்படமாக வலம் வந்தது.

இதையும் படிங்க- அந்த ஹீரோவை திட்டுவதற்காக வசனம் வைத்த பாக்கியராஜ்!.. அவருக்கு என்ன காண்டோ!..

Esthar

இப்படி குழந்தை நட்சத்திரங்களாக நடித்து வந்த நடிகைகள் தற்சமயம் கவர்ச்சி எனும் ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

Published by
prakash kumar

Recent Posts