தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நாயகர்களாக இருக்கும் சிம்பு, தனுஷ், விஷால் மற்றும் அதர்வா ஆகியோருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர்கள் நடித்து வந்த படங்களின் ரிலீஸிலும் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்களுடன் உடன்படாத நடிகர்கள் குறித்து லிஸ்ட் எடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் முக்கிய நடிகர்களான சிம்புவும், தனுஷும் இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: ஷூட்டிங் வரது கிடையாது… காசு மட்டும் வேணும்… ரெட் கார்ட் நடிகரை கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளர்!
அந்த தடையை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் எல்லாமே மாஸ் ஹிட் ரகம் தான். தற்போது இவர் மீது ஐசரி கணேஷ் கொடுத்த வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தற்போது சிம்புவுக்கு ரெட் கார்டு தரப்பட்டுள்ள நிலையில், ராஜ்கமல் தயாரிப்பில் அவர் நடித்து வரும் படமும் சிக்கலாகி இருக்கிறது.
தனுஷ் தற்போது கேப்டன் மில்லர், தனுஷ்50 உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரித்த படத்தில் ஏற்பட்ட பிரச்னையால் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த படங்களும் பிரச்னையை சந்தித்து இருக்கிறது.
இதையும் படிங்க: எங்க போனாலும் ரவுண்ட் கட்டுரானுங்க! நல்ல வேளையா ரஜினி காப்பாத்துனாரு – பெருமூச்சு விடும் லோகி
நல்ல வேளையாக விஷால் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் முடிந்த நிலையில் இந்த ரெட் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இனி அவர் நடிப்பில் உருவாகும் படங்களுக்கு தான் சிக்கல் என தகவல்கள் தெரிவிக்கிறது.
பிரச்னை ஏற்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நியாயம் கொடுக்கிறேன் என்ற பெயரில் நடந்து வரும் படங்களை நிறுத்துவது எப்படி சரியாகும்? வாங்கிய அசல் தொகையுடன் வட்டியும் சேர்ந்து தருவது தானே சரி என பல தயாரிப்பாளர்கள் கிசுகிசுக்க தொடங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.