காமெடியில் பட்டையை கிளப்பிய டாப் நடிகர்கள்!.. வேட்டியை மறந்து பல்பு வாங்கிய ரஜினி..
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றைய காலகட்டம் வரை நகைச்சுவையில் பல நடிகர்கள் தங்கள் திறமையை காட்டி வருகின்றனர். என்.எஸ்.கே, நாகேஷ், தங்கவேலு, வி.கே.ராமசாமி போன்றவர்களின் வரிசையில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற பல நடிகர்கள் நகைச்சுவையில் கலக்கியவர்கள் தான். இவர்களை தாண்டியும் எங்களாலும் நகைச்சுவை செய்ய முடியும் என பல டாப் நடிகர்களும் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.
நடிகர் ரஜினி : இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ள நடிகர் ரஜினிகாந்த். இவரின் 80களின் படங்களில் ரஜினியின் நகைச்சுவை உணர்வு அதிகமாகவே காணப்படும். குறிப்பாக தர்மத்தின் தலைவன் , அண்ணாமலை, படிக்காதவன், தில்லுமுல்லு போன்ற பல படங்களில் ஹுயுமர் சென்ஸ் அதிகமாகவே தெரியும்.
நடிகர் கமல் : எல்லா திறமைகளையும் வாய்க்கப்பெற்ற கமல் கொஞ்சம் கூடுதலாகவே நகைச்சுவையும் அதிகமாகவே இருக்கின்ற நடிகர். நகைச்சுவையாக பேசுவதிலும் நகைச்சுவை காட்சிகளில் நடிப்பதிலும் இவரை மிஞ்சிய நடிகர் இவர் தான். அவ்வைசண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற பல படங்களை உதாரணமாக கூறலாம்.
நடிகர் சத்யராஜ் : கோவையை பூர்வீகமாக கொண்டவர் ஆதலால் கொஞ்சம் குசும்பும் அதிகமாகவே இருக்கும் நடிகர் சத்யராஜ். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் கலக்கிய பல படங்கள் இருக்கின்றன. நகைச்சுவையோடு கொஞ்சம் குசும்பு தனத்தையும் வெளிப்படுத்தக் கூடிய நடிகர் தான் சத்யராஜ்.
நடிகர் பிரபுதேவா : பிரபு தேவா இயல்பாகவே நக்கல் மன்னன், அதுவும் வடிவேலுவுடன் சேர்ந்தால் இன்னும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் வடிவேலுவுடன் காதலன், ரோமியோ போன்ற பல படங்களில் காமெடியில் கலக்கியிருக்கிறார். இவரின் எதார்த்தமான நடிப்பை காதலா காதலா படத்தின் மூலம் காணலாம். அதிலும் கமலுடன் சேர்ந்து பிரபுதேவாவும் சேர்ந்து இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் அசத்தியிருப்பார்கள்.
நடிகர் விஜய் : விஜய்க்கு இயல்பாகவே ஹியூமர் சென்ஸ் அதிகம். அதுவும் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் அவரின் நகைச்சுவை மூலமாகவே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான வாரிசு படத்திலும் விஜயின் டைம்மிங் சென்ஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க : கமலுக்கு ஜோடியா?.. வர மறுத்த நடிகை!. உலகநாயகன் என்ன செய்தார் தெரியுமா?..