பிரம்மாண்ட படங்களை கொடுத்த இயக்குனர்களா இப்படியெல்லாம் நடிச்சுருக்காங்க? அட இதுல இருக்குறது சங்கரா?

by Rohini |
san
X

san

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வந்திருக்கிறார்கள். அவர்களின் சில பேர் இன்று நடிகர்களாகவும் இருக்கிறார்கள். சில பேர் தடம் மாறி இயக்குனர்களாக இருந்து வருகின்றனர். அப்படி இன்று பல பிரம்மாண்டங்களை கொடுத்த இயக்குனர்கள் ஆரம்ப காலங்களில் இப்படியெல்லாம் கூட நடித்திருக்கிறார்களா என்பதை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம்.

சங்கர் : இவர் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அவருடன் சேர்ந்து தொடர்ந்து 18 படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அப்படி எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய ஒரு படத்தில் ஒரு சின்ன ரோலில் வந்து நடித்திருக்கிறார் சங்கர். 1990 ஆம் ஆண்டில் வெளிவந்த சீதா என்ற படத்தில் ஜனகராஜுக்கு வலது கரம் போல அந்த படத்தில் நடித்திருப்பார். மிகவும் கிராமத்து பையனாக தலையில் ஒரு கோணி பையை மாட்டிக் கொண்டு அந்த படத்தில் தோன்றியிருப்பார் சங்கர். அதைப் பார்க்கும்போது எப்பேர்பட்ட படங்களை எடுத்தவர் இந்த மாதிரி நடித்திருக்கிறாரா என ஆச்சரியப்பட வைக்கின்றது.

sankar1

sankar1

ஏ ஆர் முருகதாஸ்: கஜினி துப்பாக்கி ஸ்பைடர் போன்ற மாசான படங்களை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் ஆரம்பத்தில் இவரும் உதவியாளராக இருந்து வந்தவர் தான். அப்பாஸ் நடிப்பில் வெளிவந்த பூச்சூடவா என்ற படத்தில் 1997 ஆம் ஆண்டில் ஒரு சின்னப் பையன் மாதிரியான தோற்றத்தில் நடித்திருப்பார் ஏ ஆர் முருகதாஸ். இப்பொழுது அவர் எடுக்கும் படங்களில் ஒரு பாடலிலோ அல்லது ஒரு சிறு காட்சிகளிலோ தோன்றினாலும் அந்த காலகட்டத்தில் அவர் நடித்ததை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

muruga

muruga

பா ரஞ்சித் : தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்குனர்களில் தன் படங்களின் வாயிலாக அதை வெளிப்படையாக சொல்லக் கூடியவர் பா ரஞ்சித். இப்பொழுது தங்கலான் என்ற அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கும் படத்தை விக்ரமை வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார். இவரும் ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம். 2007 இல் வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தில் கிரிக்கெட் விளையாடும் அந்த குரூப்பில் ஒரு பையனாக வந்து நடித்திருப்பார் பா ரஞ்சித்.

ranjith

ranjith

எஸ் ஜே சூர்யா : இயக்குனராக இரு படங்களை கொடுத்தாலும் தரமான படங்களை இரு முன்னணி நடிகர்களை வைத்து கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா. அதன் பிறகு அவர் எந்த படங்களையும் இயக்குவது இல்லை. இப்பொழுது அனைவரும் தேடப்படும் ஒரு நடிகராக வளர்ந்து நிற்கிறார். எந்த படங்களை எடுத்தாலும் இவர் தான் முதலில் வந்து நிற்கிறார். அந்த அளவுக்கு தன் நடிப்பிலும் பட்டையை கிளப்பி வருகிறார் எஸ் ஜே சூர்யா. ஆனால் இவர் உதவியாளராக இருக்கும்போதே ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். 1988 ஆம் ஆண்டு வெளிவந்த நெத்தியடி என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

sj-surya

sj-surya

கௌதம் வாசுதேவ் மேனன் : காதலை மையப்படுத்தி எடுக்கக்கூடிய படங்களை தரமாக கொடுப்பதில் மிகவும் வல்லவராக இருப்பவர் இயக்குனர் கௌதம் மேனன். இவருடைய பெரும்பாலான படங்கள் இவரின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும் என்பதை அவரே சில பேட்டிகளில் கூறியிருக்கிறார். இவர் படங்களை பார்க்கும் போது இந்த அளவுக்கு காதலை சொட்ட சொட்ட கொடுக்கும் இவர் உண்மையில் ஒரு ரொமான்டிக் ஆன ஆளு தானா என அனைவரையும் கேள்வி எழுப்ப வைத்திருக்கின்றது. ஆனால் கௌதம் மேனனும் ஆரம்பத்தில் அதாவது பிரபுதேவா அரவிந்தசாமி இணைந்து நடித்த மின்சார கனவு என்ற படத்தில் ஒரு சிறு காட்சியில் தோன்றியிருக்கிறார்.

gautham

gautham

Next Story