எதிர்பார்ப்பை எகிற வைத்து கண்ணாமூச்சி ஆடி வரும் தமிழ் திரைப்படங்கள்.! மொத்த லிஸ்ட் இதோ..,

Published on: May 20, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல படங்கள் ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்து வருகின்றன . சில படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஒரு கட்டத்தில் இந்த படம் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என அந்த படத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவர். எனை நோக்கி பாயும் தோட்டா, நெஞ்சம் மறப்பதில்லை என சில படங்கள் மட்டுமே அப்படி காலதாமதாக்கினாலும் பரவாயில்லை என ரிலீஸ் ஆகியுள்ளன.

ஆனால் , இன்னும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டு, ரிலீஸ் தேதிகளே தேடும் அளவுக்கு காணாமல் போன படங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். அதில் ஒரு சில ரீசன்ட் படங்களை மட்டும் இப்போது பார்க்கலாம்.

இதில் முதலில் சுந்தர்.சி – விஷால் இணைந்த முதல் படமான மதகஜராஜா. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துடன் மோதும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

அடுத்து, சர்வர் சுந்தரம். சந்தானம் நடித்து, படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் கொடுத்தது. ஆனால், படத்தின் ரிலீஸ்  அறிவிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டு தற்போது அந்த படக்குழுவே இந்த படத்தை மறந்துவிட்டனர் .

விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் இரண்டாவது முறையாக தயாரான திரைப்படம் இடம் பொருள் ஏவல். அது ரிலீஸ் ஆகுமா என படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குனர் என யாருக்கும் இப்போதும் விடை தெரியவில்லை. அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியான தர்மதுரை வெளியாகி வெற்றி பெற்றது.

மாயா படத்தின் ஹிட்டை தொடர்ந்து அந்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கிய திரைப்படம் இறவாகலாம். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், படம் இன்னும் எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியவில்லை.

வெங்கட் பிரபு இயக்கத்தில், சத்யராஜ்,ரம்யா கிருஷ்ணன், சிவா, ரெஜினா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து தயாரான திரைப்படம் பார்ட்டி. இந்த திரைப்படத்தை OTTயில் ஆவது வெளியிடுங்கள் என ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர். இதே போல மாறன் இயக்குனர்  கார்த்திக் நரேனின் இரண்டாவது படமான நரகாசூரன் படமும் முடிந்து நாட்கள் ஆகிவிட்டது. அதுவும் எப்போது வெளியாகும் என தெரியவில்லை.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment