நாட்டுப்புற பாடல் புகழ் தம்பதி புஷ்பவனம் குப்புசாமி – அனிதா ஆகியோரின் மகள் பல்லவி. இவர் மருத்துவம் படித்து வருகிறார். குப்புசாமி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தனது சகோதரியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கோபமடைந்த பல்லவி காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றதாகவும், அதன்பின் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை என்றும் குப்புசாமியின் உறவினர் கவுசிக் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் நேற்று செய்திகள் வெளியானது.
ஆனால், இந்த செய்தியை பல்லவி மறுத்துள்ளார். தான் வீட்டில்தான் இருப்பதாகவும், இந்த வதந்தியை யார் பரப்பினார்கள் என்று தெரியவில்லை எனவும் அவரின் முகநூலில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை…
ஜனநாயகன் திரைப்படம்…
பொங்கல் வெளியீடாகத்…
தமிழ் சினிமாவின்…
ஐயா திரைப்படம்…