×

ரேஷனில் 2வது தவணை ரூ.2000 - டோக்கன் இன்று முதல் வினியோகம்

 
token

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, தமிழக மக்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் கொடுக்கப்பட்டு விட்டது. அரிசி கார்டு வைத்திருப்பவர்கள் ரேஷன் கடையில் அந்த தொகையை பெற்றுக்கொண்டனர்.

மீதி தொகை ரூ. 2 ஆயிரம் 15ம் தேதிக்கு மேல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 14 மளிகைப்பொருட்களையும் மக்கள் பெற்றுக்கொள்ளலாம். 

இந்நிலையில், இன்று முதல் 14ம் தேதி வரை அதற்கான டோக்கனை வழங்கும் பணி ரேஷன் கடையில் இன்று துவங்குகிறது. எனவே, பொதுமக்கள் ரேஷன் கடைக்கு சென்று அந்த டோக்கனை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News