×

சர்ச்சையில் சிக்கிய ராதாரவி – திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை

நடிகை நயன்தாராவை கீழ்த்தரமாக விமர்சித்த ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து திமுக தலைமை நீக்கியுள்ளது. பொது மேடைகளில் பேசும் போது கேட்பவர்கள் கை தட்ட வேண்டும் என்பதற்காக கீழ்த்தரமாக பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பவர் ராதாரவி. ரஜினி, கமல் என யார் பற்றி பேசினாலும், அவன் ,இவன் என ஒருமையில் பேசுவார். சமீபத்தில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படம் தொடர்பான விழாவில் ராதாரவி நயன்தாராவை கீழ்த்தரமாக விமர்சித்தார். நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், தெலுங்கு படத்தில்
 
சர்ச்சையில் சிக்கிய ராதாரவி – திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை

நடிகை நயன்தாராவை கீழ்த்தரமாக விமர்சித்த ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து திமுக தலைமை நீக்கியுள்ளது.

பொது மேடைகளில் பேசும் போது கேட்பவர்கள் கை தட்ட வேண்டும் என்பதற்காக கீழ்த்தரமாக பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பவர் ராதாரவி. ரஜினி, கமல் என யார் பற்றி பேசினாலும், அவன் ,இவன் என ஒருமையில் பேசுவார்.

சமீபத்தில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படம் தொடர்பான விழாவில் ராதாரவி நயன்தாராவை கீழ்த்தரமாக விமர்சித்தார். நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், தெலுங்கு படத்தில் சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சீதையாக நடிக்க கே.ஆர் விஜயாவை தான் அனுகுவார்கள் ஆனால் இன்று எப்படி பட்டவர்களும் சீதையாக நடிக்கிறார்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தை சொன்னார்.

இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சினிமாத்துறையை சேர்ந்த பலரும் ராதாரவிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் சங்கம் சார்பாக விஷாலும் ராதாரவியை கண்டித்துள்ளார். இந்நிலையில், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News