×

நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது – நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் !

விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட நடிகர் சங்கத் தேர்தலே செல்லாது என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022ஆம் ஆண்டுக்கான தேர்தல், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. ஆனால் தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகளால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்தது நீதிமன்றம். இது சம்மந்தமான வழக்கின் விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில்
 
நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது – நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் !

விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட நடிகர் சங்கத் தேர்தலே செல்லாது என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022ஆம் ஆண்டுக்கான தேர்தல், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன.

ஆனால் தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகளால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்தது நீதிமன்றம். இது சம்மந்தமான வழக்கின் விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீத உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.’ என வாதாடினார்.

அதையடுத்து வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் ‘6 மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்ய நடிகர் சங்க விதிகளில் இடமில்லை. சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது’ என தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News