×

மாணவிகளுக்கு பாடமெடுக்க ஆசிரியைகள் மட்டுமே நியமனம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

 
exam

சென்னையில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில் பணிபுரியும் ராஜகோபாலன் மீது மாணவிகள் பலரும் கொடுத்த பாலியல் புகார் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரணையில் பல வருடங்களாக பல மாணவிகளுக்கும் தான் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆன்லைன் வகுப்பில் மாணவிகளை படம் பிடித்து அதை மார்பிங் செய்து அதை அவர்களுக்கு அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அவர் தெரிவித்தார். தற்போது அவரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.             

இந்நிலையில்,  சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ‘ மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளை மட்டும் நியமித்து பாடம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் தெரிவித்தார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News