×

பப்ஜி மதன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்...  காவல்துறை அதிரடி நடவடிக்கை...

 
madan

யுடியூப் சேனலில் பப்ஜி போன்ற கேம்களை உருவாக்கி சிறுவர், சிறுமியர்களை கவர்ந்தவர் மதன். டாக்ஸிக் மதன் 18+ என்கிற யுடியூப் சேனகில் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்களிடம் மிகவும் ஆபாசமாக பேசி வந்துள்ளார். அதோடு, ஆதரவற்றவர்களுக்கு உதவுவதாக கூறி பலரிடம் பணம் பறித்துள்ளார். எனவே, இவர் மீது தமிழகத்தின் பல மாவட்டங்களில் புகார் கொடுக்கப்பட்டது. 

ஆனால், போலீசார் தேடுவதை அறிந்த மதன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தன்னுடைய இருப்பிடத்தை மாற்றி மாற்றிக்காட்டி போலீசாரை குழப்பி வந்தார். அதன்பின் தர்மபுரியில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது யுடியூப் சேனல் முடக்கப்பட்டது. அவருக்கு உதவியாக அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால், மதனின் ஜாமின் மனு 2 முறையும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தில் போலீசார் வழக்குபதிவு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News