×

பெண்கள் பற்றிய சர்ச்சை பேச்சு… பாக்யராஜுக்கு மகளிர் ஆணையம் சம்மன்…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றி இயக்குனர் பாக்யராஜ் கூறியுள்ள கருத்து சர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ் ‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விஷயத்தில் பெண்களின் பலவீனத்தை சில வாலிபர்கள் தவறாக பயன்படுத்திக்கொண்டார்கள். அதில் வாலிபர்களிடம் மட்டுமல்ல.. அந்த பெண்களிடமும் தவறு இருக்கிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது. பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆண் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாலும் முதல் மனைவிக்கு எந்த குறையும் வைப்பதில்லை.. ஆனால், பெண் கள்ளக்காதலுடன்
 
பெண்கள் பற்றிய சர்ச்சை பேச்சு… பாக்யராஜுக்கு மகளிர் ஆணையம் சம்மன்…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றி இயக்குனர் பாக்யராஜ் கூறியுள்ள கருத்து சர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ் ‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விஷயத்தில் பெண்களின் பலவீனத்தை சில வாலிபர்கள் தவறாக பயன்படுத்திக்கொண்டார்கள். அதில் வாலிபர்களிடம் மட்டுமல்ல..

அந்த பெண்களிடமும் தவறு இருக்கிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது. பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆண் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாலும் முதல் மனைவிக்கு எந்த குறையும் வைப்பதில்லை.. ஆனால், பெண் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்கிறார்கள்’ எனப் பேசினார்.

பாக்யராஜின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் பாக்யராஜுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகின்றனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி தமிழக மகளிர் ஆணையத்திற்கு, ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம் எழுதியது.

இதையடுத்து, டிசம்பர் 2ம் தேதி நடிகர் பாக்யராஜ் நேரில் ஆஜராக வேண்டும் என தமிழக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இது பாக்யராஜ் தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News