×

தேவைப்பாட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் தகவல்

 
stalin

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் ஆய்வு செய்து வருகிறார். திருவள்ளூரில் ஆய்வு செய்த அவர் பத்திரிக்கையாளர்களை அவர் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தளர்வில்லா ஊரடங்கால் கடந்த 2 நாட்களாக நல்ல பலன் கிடைத்து வருகிறது. முழு ஊரடங்கின் பலன் அடுத்தடுத்த 2,3 நாட்களில் தெரிய துவங்கும். கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் இதை உணர்ந்து வீட்டில் இருக்க வேண்டும். கொரோனாவை தடுக்கும் பணியில் தமிழக அரசு முழு வீச்சாக செயல்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை அரசு உருவாக்கியுள்ளது.

நேற்று ஒரேநாளில் 2,24,544 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தில் தடுப்பூசி போடும் சராசரி விகிதம் உயர்ந்துள்ளது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி ஒன்றே வழி. எனவே, மக்கல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். தேவைப்படால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News