×

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

 
minister

இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை வீசி வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பல மாநிலங்களும் அமுல்படுத்தியது. எனவே, தற்போது கொரோனா குறைய துவங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்திலிருந்து 1.5 லட்சமாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் பல நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரமாக நீடித்து வந்தது. எனவே, தற்போது 27 ஆயிரமாக குறைந்துள்ளது. நாட்கள் செல்ல செல்ல இது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் ‘தமிழகத்தில் எவ்வளவு வேகமாக கொரோனா பரவியதோ அதே வேகத்தில் குறைந்து வருகிறது. எனவே, இதிலிருந்து மீண்டு விடுவோம் என்கிற நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது. மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News