×

இந்தியாவில் குறைந்த கொரோனா - ஒரு நாளில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு

 
corono

இந்தியாவில் வீசிவரும் கொரோனா 2வது அலையால் சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா தினசரி பாதிப்பு 3 லட்சமாக இருந்தது. ஆனால், ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது.

நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 1,00,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.  இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,89,09,975 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2427 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 14,01,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 வாரங்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 35 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு நேற்று 21,410 ஆக குறைந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News