×

தடுப்பூசி முன்பதிவு இணையதளத்தில் தமிழ் புறக்கணிப்பு...புதிய சர்ச்சை

 
covid

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன் பதிவு செய்து கொள்ள மத்திய அரசு ஒரு https://www.cowin.gov.in/ என்கிற புதிய இணைய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 18 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இதில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. எனவே, பலரும் இதில் தங்களை பற்றிய தகவலை கொடுத்து முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த இணையதளத்தில் ஏற்கனவே ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி மட்டுமே இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் தமிழ் இடம் பெறவில்லை. இது தமிழ் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News