×

ஹோட்டல் ரூமில் போதை மருந்து தயாரிப்பு – தீ பரவிய விபரீதம் !

சென்னையில் ஹோட்டல் அறையில் கஞ்சா ஜெல் தயாரித்த போது தீ பரவியதால் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். சென்னை திருவேற்காட்டிற்கு அருகில் உள்ள அயனம்பாக்கம் மாந்தோப்பு காலனியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ரேஸ் ராஜா, விக்னேஷ், மாசி, முகமது ரசாக், ராஜேஷ் ஆகிய 5 பேரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது ரேஸ் ராஜா, விக்னேஷ் ஆகிய இருவர் மட்டும் அறையில் இருக்க மற்றவர்கள் மதுபான வாங்குவதற்காக வெளியில் சென்றுள்ளனர். அறையில் இருந்த இருவரும் எலக்ட்ரிக் ஸ்டவ்
 
ஹோட்டல் ரூமில் போதை மருந்து தயாரிப்பு – தீ பரவிய விபரீதம் !

சென்னையில் ஹோட்டல் அறையில் கஞ்சா ஜெல் தயாரித்த போது தீ பரவியதால் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னை திருவேற்காட்டிற்கு அருகில் உள்ள அயனம்பாக்கம் மாந்தோப்பு காலனியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ரேஸ் ராஜா, விக்னேஷ், மாசி, முகமது ரசாக், ராஜேஷ் ஆகிய 5 பேரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது ரேஸ் ராஜா, விக்னேஷ் ஆகிய இருவர் மட்டும் அறையில் இருக்க மற்றவர்கள் மதுபான வாங்குவதற்காக வெளியில் சென்றுள்ளனர்.

அறையில் இருந்த இருவரும் எலக்ட்ரிக் ஸ்டவ் மூலம் கஞ்சா, ஸ்பிரைட் மற்றும்  ஆகியவற்றை சூடுபடுத்தி ஜெல் போன்ற ஒருவித போதை பொருளை தயாரிக்க முயன்றுள்ளனர். அப்போது அறை எங்கும் புகைமண்டலமாகியுள்ளது. அந்த நேரம் பார்த்து ராஜா சிகரெட்டை பற்றவைக்க லைட்டரை ஆன் செய்தபோது அறை முழுவதும் தீ பரவியுள்ளது. அவர்கள் இருவர் மேலும் தீ பரவ அலறிக்கொண்டு இருவரும் வெளியே ஓடியுள்ளனர்.

அவர்களை மீட்ட ஹோட்டல் நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உடலில் அதிகப்படியான தீக்காயம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக இருவரும் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெளியே சென்ற மாசி, முகமது ரசாக், ராஜேஷ் ஆகியோர்களை கைது செய்த போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News