×

நட்பாகத்தான் பழகினேன்… எஸ்கேப் ஆகிய காதலன்… கல்லூரி மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு

நான் உன்னை காதலிக்கவில்லை என காதலியின் தாயின் முன்னிலையில் காதலன் கூறியதால் கோபமடைந்த காதலி எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள குங்குமம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பிருந்தா. இவர் பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்கிற வாலிபரை காதலித்து வந்துள்ளர். எனவே, இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இதை பிருந்தாவின் தாய் பார்த்துவிட்டதாக தெரிகிறது. எனவே,
 
நட்பாகத்தான் பழகினேன்… எஸ்கேப் ஆகிய காதலன்… கல்லூரி மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு

நான் உன்னை காதலிக்கவில்லை என காதலியின் தாயின் முன்னிலையில் காதலன் கூறியதால் கோபமடைந்த காதலி எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள குங்குமம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பிருந்தா. இவர் பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்கிற வாலிபரை காதலித்து வந்துள்ளர். எனவே, இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இதை பிருந்தாவின் தாய் பார்த்துவிட்டதாக தெரிகிறது. எனவே, இதுபற்றி பிருந்தாவிடம் விசாரித்துள்ளார்.

அப்போது, நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் எனக்கூறி. சந்தோஷிடம் தனது தாயை பிருந்தா அழைத்து சென்றுள்ளார். பிருந்தாவின் தாயை கண்டதும் ‘நான் உன்னிடம் நட்பாகத்தான் பழகினேன் என சந்தோஷ் கூறியுள்ளார். இதைக்கேட்டு பிருந்தா அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின், வீட்டிற்கு வந்து சந்தோஷை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவர் எடுக்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த பிருந்தா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தின் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை மரணமடைந்தார். இருப்பதற்கு முன் தன்னுடைய மரணத்திற்கு சந்தோஷே காரணம் என அவர் பேசிய வீடியோ வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News