×

பிறந்தநாளில் இளையராஜா புது அறிவிப்பு – இசைக்கலைஞர்கள் நெகிழ்ச்சி !

இளையராஜா தனது 76 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இசைக்கலைஞர்களை மகிழ்விக்கும் விதமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இசைஞானி இளையராஜாவின் 76 ஆவது பிறந்தநாள நேற்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு நேற்று சென்னை பூந்தமல்லி அருகே இளையராஜாவின் இசைக்கச்சேரி ஒன்று நடைபெற்றது. இதில் எஸ்பிபி, ஜேசுதாஸ் உள்ளிட்ட பல ஜாம்பவான் பாடகர்கள் கலந்து கொண்டு இசைராஜாவின் பாடல்களை பாடினர். இந்த விழாவின் முடிவில் இசைஞானி இளையராஜா ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி வடபழனியில் அமைந்துள்ள தென்னிந்திய திரையிசை
 
பிறந்தநாளில் இளையராஜா புது அறிவிப்பு – இசைக்கலைஞர்கள் நெகிழ்ச்சி !

இளையராஜா தனது 76 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இசைக்கலைஞர்களை மகிழ்விக்கும் விதமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் 76 ஆவது பிறந்தநாள  நேற்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு நேற்று சென்னை பூந்தமல்லி அருகே  இளையராஜாவின் இசைக்கச்சேரி ஒன்று நடைபெற்றது. இதில் எஸ்பிபி, ஜேசுதாஸ் உள்ளிட்ட பல  ஜாம்பவான் பாடகர்கள் கலந்து கொண்டு இசைராஜாவின் பாடல்களை பாடினர்.
இந்த விழாவின் முடிவில்  இசைஞானி இளையராஜா ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி வடபழனியில் அமைந்துள்ள தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டடத்தை புதுப்பித்து தனது சொந்த செலவில் கட்டித்தர இருக்கிறேன் என்று அறிவித்தார். இளையராஜாவின் இந்த அறிவிப்புக்கு திரையிசை கலைஞர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News