×

இளையராஜா பேசக்கூடாது – என்ன சொல்கிறார் நடிகை கஸ்தூரி?

இசைஞானி பற்றி நடிகை கஸ்தூரி பதிவிட்டிருக்கும் டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டவர் இளையராஜா. சமீபத்தில் வெளியான 96 மற்றும் மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்களில் இதுபோல சில இளையராஜா பாடல்களும் அவரது பெயரும் பயன்படுத்தப்பட்டது. அந்தப் படங்களும் வெகுவாகக் கவனம் பெற்றன. இது குறித்து இளையராஜாவிடம் கேள்வி எழுப்பியபோது ’இது மிகவும் தவறான செயல். குறிப்பிட்டக் காலத்தில் இடம்பெறும் பாடல் என்றால் ஏன் நான் இசையமைத்த பழையப் பாடல்களை
 
இளையராஜா பேசக்கூடாது – என்ன சொல்கிறார் நடிகை கஸ்தூரி?

இசைஞானி பற்றி நடிகை கஸ்தூரி பதிவிட்டிருக்கும் டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டவர் இளையராஜா.

சமீபத்தில் வெளியான 96 மற்றும் மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்களில் இதுபோல சில இளையராஜா பாடல்களும் அவரது பெயரும் பயன்படுத்தப்பட்டது. அந்தப் படங்களும் வெகுவாகக் கவனம் பெற்றன.

இது குறித்து இளையராஜாவிடம் கேள்வி எழுப்பியபோது ’இது மிகவும் தவறான செயல். குறிப்பிட்டக் காலத்தில் இடம்பெறும் பாடல் என்றால் ஏன் நான் இசையமைத்த பழையப் பாடல்களை உபயோகப்படுத்த வேண்டும் ?. சூழ்நிலைக்கேற்ப அந்தப்படத்தின் இசையமைப்பாளரே பாடலை இசையமைக்க முடியாதா?. இது அவர்களின் திறமையின்மை மற்றும் ஆண்மை இல்லாத தனத்தைதான் காட்டுகிறது’ எனக் கடுமையாக சாடினார்.

இதைத் தொடர்ந்து, இளையராஜவின் கருத்து ஆதரவாக பலரும், எதிராக பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “இளையராஜா அவர்கள் இசையால் மட்டும் உரையாடவேண்டும்” என வேண்டுகோள் வைத்திருந்தார். அதாவது அவர் ஏன் தேவையில்லாமல் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்க வேண்டும். அவருக்கு இது அவசியமில்லை என்கிற ரீதியில் அந்த பதிவு இருந்தது.

மேலும், மடியும் எண்ணத்தில் இருந்த ஏன் மனதை அவர் இசையால் மாற்றி எனக்கு மறுவாழ்வு தந்த இசைக்கடவுள் இளையராஜா அவர்கள். கடவுளை கேள்வி கேட்கவேண்டாமே ? எனவும் பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News