×

15 மாவட்டங்களுக்கு கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

 
rain

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டி, சிவகங்கை ஆகிய ஊர்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிசி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News