×

10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை -   வானிலை மையம் அறிவிப்பு

 
rain

வெப்பச்சலனம் காரணமாக சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தர்மபுரி, சேலம் ,நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News