×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.1 லட்சம்...

 
kanimoli

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலரும் பாதிக்கப்பட்டனர். 13 பேர் உயிரிழந்தனர். எனவே, அந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு அரசு பணியை ஸ்டாலின் வழங்கினார். மேலும், அந்த போராட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் திமுக எம்.பி.கனிமொழி நிவாரண தொகை ரூ.1 லட்சத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கனிமொழி வழங்கினார். மேலும், வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்த நபரின் தயாருக்கு ரூ.2 லட்சத்தை கனிமொழி வழங்கினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News