×

மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு....

 
stalin

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2 மாதங்களாகவே வாரங்களின் அடிப்படையில் ஊரடங்கு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைவதற்கு ஏற்றார்போல் மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.    

இந்நிலையில், ஜூலை 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, 

ஜூலை 5ம் தேதி மூதல் பொதுபோக்குவரத்து அனுமதி, ஹோட்டல் மற்றும் டீக்கடைகளில் 50 சதவீத இருக்கையில் அமர்ந்து சாப்பிட அனுமதி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் ரத்து, உடற்பயிற்சி கூடங்கள், உணவகம், விளையாட்டு வசதிகளுடன் கிளப்புகள் செயல்பட அனுமதி, டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி என முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News