×

அண்ணியின் தங்கை மீது மோகம் ; வாலிபரின் வெறிச்செயல் : சென்னையில் அதிர்ச்சி

Girl Murder in chennai – அண்ணியின் தங்கை மீது ஆசை கொண்ட வாலிபர் அவரை வீட்டிற்கு வரவழைத்து செய்து காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷ் என்ற வாலிபர் சென்னை தாம்பரம் அருகேயுள்ள சிட்லபாக்கத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். சந்தோஷின் அண்ணியின் தங்கை அகிலா அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்ற போது, அவர் மீது சந்தோஷுக்கு காதல் ஏற்பட்டது. எனவே, அதை அவரிடம் கூற
 
அண்ணியின் தங்கை மீது மோகம் ; வாலிபரின் வெறிச்செயல் : சென்னையில் அதிர்ச்சி

Girl Murder in chennai – அண்ணியின் தங்கை மீது ஆசை கொண்ட வாலிபர் அவரை வீட்டிற்கு வரவழைத்து செய்து காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தோஷ் என்ற வாலிபர் சென்னை தாம்பரம் அருகேயுள்ள சிட்லபாக்கத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.

சந்தோஷின் அண்ணியின் தங்கை அகிலா அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்ற போது, அவர் மீது சந்தோஷுக்கு காதல் ஏற்பட்டது. எனவே, அதை அவரிடம் கூற தகுந்த சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். பல்லாவரத்தில் லேப் டெக்னீஷியனாக அகிலா பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், பிரசவத்திற்காக அவரின் அண்ணியும், அண்ணனும் ஊருக்கு சென்றிருந்தனர். எனவே, கடந்த 9ம் தேதி அகிலாவை சந்தோஷ் வீட்டிற்கு அழைத்து தன் காதலை தெரிவித்துள்ளார். ஆனால், தான் வேறு ஒருவரை காதலிப்பதாக அகிலா கூற ஆத்திரமடைந்த சந்தோஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அகிலாவை வற்புறுத்தியுள்ளார். ஆனால், முடியாது என அகிலா கூற, ஆத்திரமடைந்த சந்தோஷ் அகிலாவை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

10ம் தேதி காலை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்று வீட்டின் கதவில் தலையில் இடித்து அகிலா மயங்கி விட்டதாக கூறியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மேலும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசாரின் விசாரணையில் சந்தோஷ்தான் அகிலாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. எனவே, அவரை போலீசார் கைது செய்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News