×

ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடை இல்லை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 
madurai

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்த பின், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசை ஒன்றிய அரசு என்றே அழைத்து வருகின்றனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அப்படி அழைப்பதில் தவறு இல்லை. ஒன்றியம் என்கிற வார்த்தை அரசியல் அமைப்பு சட்டத்திலேயே இருக்கிறது. எனவே, அப்படித்தான் அழைப்போம் என ஸ்டாலின் விளக்கமளித்தார்.

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பாஜக சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் ‘  ஒன்றிய அரசு என சொல்வதற்கு தடையில்லை

முதலமைச்சரும், அமைச்சர்களும் மற்றவர்களும் ஒன்றிய அரசு என சொல்லாமல் இப்படிதான் பேசவேண்டும் என்றெல்லாம் உத்தரவிடமுடியாது’ என தீர்ப்பளித்துள்ளனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News