×

10ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘தேர்ச்சி’ என சான்றிதழ் - பள்ளிக்கல்வித்துறை முடிவு

 
sslc

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதில், பொதுத்தேர்வான பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் ‘தேர்ச்சி’ என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News