×

திருமணம்…ஆபாச புகைப்படம்.. மிரட்டல் – மீண்டும் நடிகை நிலானி

தன்னை திருமணம் செய்வதாய் ஏமாற்றி ஒருவர் ஏமாற்றியதோடு, ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி வருவதாக நடிகை நிலானி புகார் தெரிவித்துள்ளார். சினிமா உதவி இயக்குனர் காந்தி தன்னை மிரட்டி வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை நிலானி. அதன்பின் காந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த பிரச்சனையில் விஷம் குடித்து நிலானி தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது வேறு ஒரு பரபரப்பை அவர் கிளப்பியுள்ளார். தனக்கு பாலியல்ரீதியாக ஒருவர் தொல்லை கொடுப்பதாக அவர் சென்னை
 
திருமணம்…ஆபாச புகைப்படம்.. மிரட்டல் – மீண்டும் நடிகை நிலானி

தன்னை திருமணம் செய்வதாய் ஏமாற்றி ஒருவர் ஏமாற்றியதோடு, ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி வருவதாக நடிகை நிலானி புகார் தெரிவித்துள்ளார்.

சினிமா உதவி இயக்குனர் காந்தி தன்னை மிரட்டி வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை நிலானி. அதன்பின் காந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த பிரச்சனையில் விஷம் குடித்து நிலானி தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருமணம்…ஆபாச புகைப்படம்.. மிரட்டல் – மீண்டும் நடிகை நிலானி

தற்போது வேறு ஒரு பரபரப்பை அவர் கிளப்பியுள்ளார். தனக்கு பாலியல்ரீதியாக ஒருவர் தொல்லை கொடுப்பதாக அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

கடந்த வரும் என்னை பற்றிய செய்திகள் வெளியானபோது என் செல்போன் எண்களும் வெளியானது. அப்போது பலர் என்னிடம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர். ஒரு சிலர் ஆபாசமாகவும் பேசினர்.

திருமணம்…ஆபாச புகைப்படம்.. மிரட்டல் – மீண்டும் நடிகை நிலானி

அதில், மஞ்சுநாதன் என்பவர் வெளிநாட்டில் இருந்து பேசுவதாக என்னிடம் கூறினார். தனக்கு திருமணம் ஆகவில்லை எனவும் , இருவரும் திருமணம் செய்து கொள்வோம் எனவும் கூறினார். இதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன். அதன் அவரை நேரிலும் சந்தித்தேன். ஆனால், அவர் திருமணம் ஆனவர் என்பது எனக்கு தெரியவந்ததும் அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டேன்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் ‘உன்னுடைய ஆபாச படங்களை எடுத்து வைத்திருக்கிறேன். நான் சொல்வதை கேட்காவிட்டால் உனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்’ என மிரட்டி வருகிறார். கொலை மிரட்டலும் விடுகிறார் என நிலானி அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

போலீசார் இதுபற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News