×

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 - விரைவில் தித்திப்பான அறிவிப்பு!

 
stalin

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என திமுக அறிவித்தது. தற்போது திமுக வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில், குடும்ப தலைவிகளுக்கு 1000 வழங்கும் திட்டம் எப்போது துவங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ‘தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவகிறார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிப்பட்து பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும்’ என அவர் தெரிவித்தார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News