×

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்.. இன்னும் 100 நாட்களில் அமுல்...

 
archagar

தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை மறைந்த அறிஞர் அண்ணா கொண்டு வந்தார். மறைந்த முதல்வர் கருணாநிதி அவரது ஆட்சியில் இந்த திட்டத்தை அமுல்படுத்த நினைத்து, அதற்கான கல்வி முறையையும் கொண்டுவந்தார். எனவே, பலரும் அந்த கல்வியில் பயிற்சி எடுத்தனர். ஆனால், அவர்களுக்கு அரசு பணி வழங்கப்படவில்லை. எனவே, அவர்கள் பல வருடங்களாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

sekar

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை இன்னும் 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவோம். இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்’ என அவர் கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News