×

கொரோனாவால் உயிரிழந்த செய்தியாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 
stalin

இந்தியா முழுவதும் கொரோனா 2 வது அலை வீசி வருகிறது. எனவே,  தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 35 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. 

எனவே, கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அறிமுகப்படுத்தியது. ஆனால், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. எனவே, தளர்வுகள் இன்றி மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.  காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள் உட்பட எந்த கடையும் திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்த பத்திரிக்கையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரூ.5 லட்சமாக இருந்த இழப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்தி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  மேலும், செய்தியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி அவர் அறிவித்துள்ளார்.      

From around the web

Trending Videos

Tamilnadu News