×

தூத்துக்குடி முன்னாள் ஆட்சியர் வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது வெங்கடேசன் என்பவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்தார். இதனையடுத்து அவர் மாற்றப்பட்டு சந்தீப் நந்தூரி என்பவர் புதிய ஆட்சியராக தூத்துக்குடிக்கு நியமிக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் ஆட்சியர் வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது. தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் 100-வது போராட்டத்தின் போது பொதுமக்கள் 144 தடை உத்தரவையும் மதிக்காமல் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக
 
தூத்துக்குடி முன்னாள் ஆட்சியர் வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது வெங்கடேசன் என்பவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்தார். இதனையடுத்து அவர் மாற்றப்பட்டு சந்தீப் நந்தூரி என்பவர் புதிய ஆட்சியராக தூத்துக்குடிக்கு நியமிக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் ஆட்சியர் வெங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது.

தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் 100-வது போராட்டத்தின் போது பொதுமக்கள் 144 தடை உத்தரவையும் மதிக்காமல் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அங்கு கலவரம் வெடிக்க வாகனங்கள் தீக்கிறைக்கப்பட்டன. இதனையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்த திணறிய காவல்துறை போராட்டக்காரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். பலரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட பச்சைப்படுகொலை என கூறப்பட்டது. மேலும் துப்பாக்கிச்சூட்டுக்கான உத்தரவை யார் வழங்கினார் என கேள்வி எழுப்பப்பட்டது. இதனையடுத்து துணை வட்டாட்சியர் தான் உத்தரவு பிறப்பித்ததாக கூறப்பட்டது. ஆனால் இதில் சந்தேகம் எழுப்பப்பட்டது, துணை வட்டாட்சியரை இதில் பலிகடாவாக்கப்பார்க்கிறார்கள் என கூறப்பட்டது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேசனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தற்போது விசாரித்து வருகிறது. சாலை மார்க்கமாக மதுரை விமானநிலையத்துக்கு வந்த மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விமான நிலையத்தின் உள்ளே உள்ள கண்ணாடி அறையில் வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணை குறித்த தகவல் அவருக்கு நேற்றே தெரிவிக்கப்பட்டு, அவர் நேற்றே மதுரை விருந்தினர் மாளிகைக்கு வந்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணையில் சில ரகசிய உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News