×

ஊரடங்கு நீட்டிப்பு!.. தமிழகத்தில் என்னென்ன தளர்வுகள் மற்றும் தடைகள்?....

 
lockdown

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2 மாதங்களாகவே வாரங்களின் அடிப்படையில் ஊரடங்கு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைவதற்கு ஏற்றார்போல் மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.    

இந்நிலையில், ஜூலை 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

stalin

எவற்றுக்கெல்லாம் அனுமதி:

ஜூலை 5ம் தேதி மூதல் பொதுபோக்குவரத்து அனுமதி. எனவே எல்லா மாவட்டங்களிலும் பேருந்து அனுமதி...
ஹோட்டல் மற்றும் டீக்கடைகளில் 50 சதவீத இருக்கையில் அமர்ந்து சாப்பிட அனுமதி 
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் ரத்து, 
உடற்பயிற்சி கூடங்கள், உணவகம், விளையாட்டு வசதிகளுடன் கிளப்புகள் செயல்பட அனுமதி, 
டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி செயல்பட அனுமதி திறக்க அனுமதி
துணிக்கடைகள், நகைக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி..
வணிக வளாகங்கள் காலை 9 முதல் இரவு 8 வரை செயல்பட அனுமதி..
ஐ.டி.நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி
லாட்ஜ், கெஸ்ட் ஹவுஸ் செயல்பட அனுமதி 

எவற்றுக்கெல்லாம் தடை:

மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து இயக்க தடை
திரையரங்குகள்
அனைத்து மதுக்கூடங்கள்
நீச்சல் குளங்கள்
பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்
பொழுதுபோக்கு விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
உயிரியல் பூங்காங்கள்

ஆகியவற்றுக்கு அனுமதி மறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News