×

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு – பொதுமக்கள் மகிழ்ச்சி !

தமிழகத்தில் பல இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்தாண்டு கோடைக்காலம் வரும் முன்னரே வெய்யிலின் தாக்கம் அதிகமாகி வந்தது. இந்தாண்டு பருவமழைப் பொய்த்ததே இதற்குக் காரணம். நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களில் வெய்யில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தொட்டுள்ளது. இதனால் தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. அதிகப்படியான வெப்பம் காரணமாக வெப்பச்சலன மழை நேற்று சில இடங்களில்
 
இன்றும் கனமழைக்கு வாய்ப்பு – பொதுமக்கள் மகிழ்ச்சி !

தமிழகத்தில் பல இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இந்தாண்டு கோடைக்காலம் வரும் முன்னரே வெய்யிலின் தாக்கம் அதிகமாகி வந்தது. இந்தாண்டு பருவமழைப் பொய்த்ததே இதற்குக் காரணம். நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களில் வெய்யில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தொட்டுள்ளது. இதனால் தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது.

அதிகப்படியான வெப்பம் காரணமாக வெப்பச்சலன மழை நேற்று சில இடங்களில் பெய்தது. நேற்றைப் போல இன்றும் தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும் இந்த சூழ்நிலையில் மழைப் பற்றிய செய்தி மக்களுக்கு சிறிய மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News