×

தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் திருவாரூர், நாகை, வேதாரண்யம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மீழாத நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என கடந்த 21ம் தேதி சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 8 மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து
 
தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் திருவாரூர், நாகை, வேதாரண்யம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மீழாத நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என கடந்த 21ம் தேதி சென்னை வானிலை மையம் கூறியிருந்தது.

அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 8 மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் உட்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து விட்டதால், சனிக்கிழமையில் இருந்து 3 நாட்களில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று மாலை தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News