×

ரஜினி நிச்சயம் ஜெயிலுக்கு போவார் ! சுப்பிரமணிய சுவாமி பரபரப்பு பேட்டி

ரஜினியின் அரசியல் வருகை குறித்து சர்ச்சை கருத்தை கூறிய சுப்பிரமணிய சுவாமி. மத்திய பாஜகவின் மூத்த தலைவராக இருப்பவர் சுப்பிரமணிய சுவாமி. டிவிட்டர் மற்றும் ஊடக பேட்டிகளில் பல எதிர்மறையான கருத்துகளை கூறி கடுமையான விமர்சனங்களுக்கு பெயர் போனவர். கடந்த ஆண்டு கூட ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தன் சொந்த கட்சிக்கு வாக்கு சேகரிக்காமல் தினகரனுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதால் சலசலப்பானது. ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் பாஜக எடுக்கவில்லை. இந்நிலையில்
 
ரஜினி நிச்சயம் ஜெயிலுக்கு போவார் ! சுப்பிரமணிய சுவாமி பரபரப்பு பேட்டி

ரஜினியின் அரசியல் வருகை குறித்து சர்ச்சை கருத்தை கூறிய சுப்பிரமணிய சுவாமி.

 

மத்திய பாஜகவின் மூத்த தலைவராக இருப்பவர் சுப்பிரமணிய சுவாமி. டிவிட்டர் மற்றும் ஊடக பேட்டிகளில் பல எதிர்மறையான கருத்துகளை கூறி கடுமையான விமர்சனங்களுக்கு பெயர் போனவர். கடந்த ஆண்டு  கூட ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தன் சொந்த கட்சிக்கு வாக்கு சேகரிக்காமல் தினகரனுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதால் சலசலப்பானது. ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் பாஜக எடுக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த சுப்பிரமணிய சுவாமி கூறியதாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் , மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து ஒன்றுமே தெரியல , உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. ஆனால் மோடி இந்தியா 6 வது இடத்தில் உள்ளது என்று உளறி வருகிறார்.

ரஜினி நிச்சயம் ஜெயிலுக்கு போவார் ! சுப்பிரமணிய சுவாமி பரபரப்பு பேட்டி

மேலும் ரஜினி அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் , ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். மீறி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஜெயிலுக்கு செல்வார் என்று காட்டமாக கூறினார்.

இவரின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News