×

திருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம்

Pollachi pragathi murder case – கொலை செய்யப்பட்ட மாணவி பிரகதி, தன்னை மறுமணம் செய்து கொள்ளும்படி நச்சரித்ததால் கொலை செய்து விட்டேன் என சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். பொள்ளாசியில் பிரகதி என்கிற கல்லூரி மாணவி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சதீஷ்குமார் என்கிற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது. பிரகதியை அவர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாகவும், ஆனால் அதற்கு பிரகதியின் பெற்றோர்கள்
 
திருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம்

Pollachi pragathi murder case – கொலை செய்யப்பட்ட மாணவி பிரகதி, தன்னை மறுமணம் செய்து கொள்ளும்படி நச்சரித்ததால் கொலை செய்து விட்டேன் என சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொள்ளாசியில் பிரகதி என்கிற கல்லூரி மாணவி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சதீஷ்குமார் என்கிற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது.

பிரகதியை அவர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாகவும், ஆனால் அதற்கு பிரகதியின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. மேலும், வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரத்தில் சதீஷ் கொலை செய்து விட்டதாக செய்தி வெளியானது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள செய்தி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சதீஷ் அளித்த வாக்குமூலத்தில் ‘நானும், பிரகதியும் சிறு வயதிலிருந்தே நெருங்கி பழகினோம். அவருக்கு நிறைய பணம், நகைகளை வாங்கி கொடுத்தேன். அதனால், கடனாளி ஆனேன். ஆனால், எனக்கு வேறு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டது. கேரளாவில் வட்டிக்கு பணம் விடும் தொழில் செய்து வந்தேன். அதன் பின்னும் பிரகதியுடனான உறவு தொடர்ந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். அப்போதுதான் அவருக்கு திருமணம் நிச்சயம் ஆனது.

எனக்கு இதில் விருப்பமில்லை. நான் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன். என்னை 2வது திருமணம் செய்து கொள் என என்னை நச்சரித்து வந்தாள். எனவே, சம்பவத்தன்று அவளை சந்தித்தேன். அப்போதும், என்னிடம் பணம், நகை கேட்டு நச்சரித்தாள். அதனால் கோபத்தில் அவளை கழுத்தறுத்து கொலை செய்தேன்’ என அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

சதீஷின் இந்த வாக்குமூலம் பிரகதி கொலை வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News