×

ஜூலை 3வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு? - ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை...

 
school

தமிழகத்தில் கொரொனா தொற்று வேகமாக குறைந்துவருவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. அதேநேரம், நேற்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிப்பில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளி,கல்லூரிகள் திறப்பது பற்றி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில்,கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருவதால் தமிழகத்தில் ஜூலை 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. கல்வி, தேவை, மாணவர் நலன்கருதி இந்த நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும் என அந்த சங்கத்டின் மாநில தலைவர் இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதை தமிழக அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News