×

போராடி ஒட்டுப் போட்ட சிவகார்த்திகேயன்…

Actor sivakarthikeyan – வாக்காளர் பட்டியல் பெயர் இல்லாத நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் போராட்டி ஓட்டுப் போட்ட சம்பவம் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சென்னையிலும் வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்று வருகிறது. நடிகர்கள் பலரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினி, கமல், தனுஷ், சூர்யா, கார்த்திக்,
 
போராடி ஒட்டுப் போட்ட சிவகார்த்திகேயன்…

Actor sivakarthikeyan – வாக்காளர் பட்டியல் பெயர் இல்லாத நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் போராட்டி ஓட்டுப் போட்ட சம்பவம் நடந்து முடிந்துள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

சென்னையிலும் வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்று வருகிறது. நடிகர்கள் பலரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினி, கமல், தனுஷ், சூர்யா, கார்த்திக், சிவகுமார், ஜோதிகா, குஷ்பு, ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் சென்னையில் இன்று காலை வாக்களித்தனர்.

போராடி ஒட்டுப் போட்ட சிவகார்த்திகேயன்…

அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு ஓட்டு இல்லை என இன்று காலை செய்திகள் வெளியனது. வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் இன்று காலை சிவகார்த்திகேயன் வாக்களிப்பதாக இருந்தது. ஆனால், அவரது மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியிலில் இருந்தது. ஆனால், சிவகார்த்திகேயன் பெயர் இல்லை. எனவே, அவரால் வாக்களிக்க முடியவில்லை.

அதன்பின் கடும் போராட்டத்திற்கு சிவகார்த்திகேயன் வாக்களிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதன்பின் அவர் வாக்களித்தார். வாக்களித்த புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன் “ஓட்டு உங்கள் உரிமை. அதற்காக சண்டையிடுங்கள்” என டிவிட் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News