×

காவலர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை - ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

 
stalin

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு, முதல் தவணையாக 2 ஆயிரம் கொடுக்கப்பட்டு விட்டது. 2வது தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரொனா பெருந்தொற்றின் முதல் மற்றும் 2வது அலைகளின் போது தங்களின் உயிரையும் துட்சமென மதித்து கடமையாற்றி வரும் இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையினருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகைய வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News