×

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

 
stalin

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின் அந்த ஊரடங்கு ஜுன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் விளைவாக 35 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து நேற்று 24,405 ஆக குறைந்தது.  நாட்கள் செல்ல செல்ல இது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால், சென்னை, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. எனவே, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்படுமா என்கிற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலவர் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எனவே, ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News