×

நாளை முதல் நிவாரண தொகை 2ம் தவணை ரூ.2 ஆயிரம்... துவங்கி வைக்கும் ஸ்டாலின்..

 
stalin

தமிழகத்தில் 2வது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதே, தமிழக மக்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் கொடுக்கப்பட்டு விட்டது. அரிசி கார்டு வைத்திருப்பவர்கள் ரேஷன் கடையில் அந்த தொகையை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மீதமுள்ள ரூ.2 ஆயிரத்தை வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் நாளை துவங்கி வைக்கவுள்ளார். மேலும், 14 மளிகைப்பொருட்களை வழங்கும் திட்டத்தையும் அவர் நாளை துவங்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News