×

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – எதற்கு தெரியுமா?

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தனது கட்சி பணிகளையும் கவனித்து வருகிறார். 2016ம் ஆண்டு தனது வீட்டின் படிக்கட்டில் விழுந்து அவரின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு அந்த காலில் டைட்டேனியம் கம்பியை மருத்துவர்கள் பொருத்தினர். அதன்பின் அரசியல் மற்றும் சினிமா தொடர்பான பணிகள் காரணமாக அந்த கம்பியை அகற்ற முடிய நேரம்
 
கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – எதற்கு தெரியுமா?

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தனது கட்சி பணிகளையும் கவனித்து வருகிறார். 2016ம் ஆண்டு தனது வீட்டின் படிக்கட்டில் விழுந்து அவரின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு அந்த காலில் டைட்டேனியம் கம்பியை மருத்துவர்கள் பொருத்தினர்.

அதன்பின் அரசியல் மற்றும் சினிமா தொடர்பான பணிகள் காரணமாக அந்த கம்பியை அகற்ற முடிய நேரம் இல்லை.

இந்நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நாளை அக்கம்பியை அகற்றும் சிகிச்சை செய்யப்படவுள்ளது. அதன்பின் சில நாட்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News