×

மாஸ்க் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு விலை நிர்ணயம் - தமிழக அரசு அறிவிப்பு

 
mask

கொரோனா தொற்று 2வது அலை காரணமாக காரணமாக தமிழகதில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த, கொரோனா வைரஸ் பரவாமல்  இருக்க,  மாஸ்க், சானிட்டைசர் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். ஆனால், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மெடிக்கல் ஷாப்பிலும், மற்ற கடைகளிலும் மிகவும் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். எனவே, இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், மாஸ்க் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு விலை நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 3 வெவ்வேறு வகைகளை கொண்ட சர்ஜிகல் மாஸ்க்குகள் முறையே ரூ.3. ரூ.4, ரூ.4.50 எனவும், என்-95 மாஸ்க் ரூ.22 எனவும், 220 மில்லி சானிடைசரின் விலை ரூ.110 எனவும், பிபிஇ கிட் - ரூ.273 எனவும், ஆக்சிஜன் மாஸ்க் ரூ.54 எனவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் ரூ.1500 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News