×

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? - என்னென்ன தளர்வுகள்?

 
stalin

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முன்பு தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய துவங்கியது. அதன்பின்,  மேலும் ஒரு வாரம் அதாவது ஜூன் 14ம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. எனவே, ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது பற்றியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். இதில், மேலும் ஒரு வாரம் ஊடங்கை நீட்டிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் நடைபயிற்சி செய்வது, டாஸ்மாக் கடைகள் திறப்பது உள்ளிட்ட பல தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News