×

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி... குடிமகன்கள் கொண்டாட்டம்....

 
tasmac

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முன்பு தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய துவங்கியது. அதன்பின்,  மேலும் ஒரு வாரம் அதாவது ஜூன் 14ம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த ஊரடங்கு மீண்டும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூன் 21ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கொரோனா பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சலூன் கடை, டாஸ்மாக் கடை, அழகு நிலையங்கள், மிதி வண்டி மற்றும் இருசக்கர வாகனங்களை பழுது நீக்கும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படுவது குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உள்ளிட்ட இதர 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் (டாஸ்மாக்) செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகவுள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், தஞ்சை, நாமக்கல், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News