×

இளம்பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்‘பில் ஆபாச படம் அனுப்பி டார்ச்சர்: பட்டதாரி கைது

whatsApp crime திருமணம் ஆன இளம்பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்‘பில் ஆபாச படம் அனுப்பிய பட்டதாரி இளைஞரை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம் பெண் அளித்த புகாரில். ‘மர்ம நபர் ஒருவர் தனது செல்போன் எண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, சைபர்
 
இளம்பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்‘பில் ஆபாச படம் அனுப்பி டார்ச்சர்: பட்டதாரி கைது

whatsApp crime

திருமணம் ஆன இளம்பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்‘பில் ஆபாச படம் அனுப்பிய பட்டதாரி இளைஞரை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம் பெண் அளித்த புகாரில். ‘மர்ம நபர் ஒருவர் தனது செல்போன் எண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் அந்த இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச படங்கள் வரும் செல்போன் எண் யாருடையது? என்பதை கண்டுபிடித்தனர். அது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த மாரிதுரை (வயது 27) என்பது தெரியவந்தது.

நேற்று முன்தினம் அவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னபூரணி தலைமையிலான போலீசார் மாரிதுரை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மாரிதுரையை சிறையில் அடைத்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News